ஈரோட்டில் மின்கம்பி உரசியதில் தனியார் உணவகத்தின் முன்பகுதி முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது.
கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்த கோவிந்தன், திருநகர் காலனி செல்லும் சாலையில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் உணவகத்துக்கு முன்பு செல்லும் மின்கம்பியில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இதில் கடையின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.