போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனா பானு, சகோதரர் சலீம் ஆகியோர் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக் கடந்த மார்க் மாதம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் அவர் ஈடுபட்டது உறுதியானதையடுத்து ஜாபர் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனா பானு, சகோதரர்கள் சலீம், மைதீன் ஆகியோரிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் போதைப்பொருள் கடத்தலுக்கு அமீனா பானு, சலீம் ஆகியோர் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து இருவர் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.