மயிலாடுதுறையில் காலியாக உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் இயங்கிவரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வாகன பதிவு, உரிமம் நீட்டிப்பு உள்ளிட்ட சேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 6 மாதமாக வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடம் காலியாக உள்ளதால் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராம.சேயோன் கடிதம் அளித்தார்.