புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் சூது பவளமணிகள் கண்டெடுக்கப்பட்டன.
பொற்பனைக்கோட்டையில் 2ம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் இதுவரை சுமார் 519 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 2 குழிகள் தோண்டப்பட்டு மீண்டும் பணிகள் நடைபெற்று வந்தன.
தற்போது இரண்டு சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது பொற்பனைக்கோட்டையில் மணிகள் செய்வதற்கான தொழிற்கூடம் இருந்ததற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.