நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி செல்லும் சாலையில் சுற்றித்திரிந்த புலியை வாகன ஓட்டிகள் கண்டு ரசித்தனர்.
நீலகிரி மாவட்டம் 65 சதவிகித வனப்பகுதியை கொண்டுள்ளதால் புலி, சிறுத்தை, கரடி போன்ற பல வனவிலங்குகள் காணப்படுகின்றன.
உணவுதேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதும், அவற்றை வனத்துறையினர் விரட்டும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் மஞ்சூர் – அப்பர்பவானி சாலையில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி சாலையில் உலா வந்தது. அதைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனத்தில் இருந்தபடியே கண்டு ரசித்ததுடன் வீடியோவாகவும் பதிவு செய்தனர்.