ஆந்திர மாநிலம் சித்தூரில் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் மீது மற்றொருவர் பேருந்து ஏற்றி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் இருந்து விஜயவாடா நோக்கி இரண்டு தனியார் சொகுசுப் பேருந்துகள் சென்றுகொண்டிருந்தன. மகாசமுத்திரம் அருகே சென்றபோது பேருந்துகள் உரசியதில் ஒரு பேருந்தின் கண்ணாடி உடைந்துள்ளது.
இதனால் சுதாகர் ராஜு, ஸ்ரீனிவாச ராவு ஆகிய இரு ஓட்டுநர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுதாகர் ராஜு மீது ஸ்ரீனிவாச ராவு பேருந்தை ஏற்றினார்.
இதில் சுதாகர் ராஜு சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.