காரைக்கால் மாவட்டம் திருநள்ளார் அருகே மூதாட்டியை தாக்கி விட்டு வீட்டில் இருந்த 50 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனார்.
அம்பகரத்தூரில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி கனகவள்ளி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமலிங்கம் வீட்டில் இல்லாத நிலையில், அங்கு சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கனகவள்ளியை சப்பாத்தி கட்டையால் கடுமையாக தாக்கி விட்டு வீட்டில் இருந்த 50 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.