தென்காசி மாவட்டம் கடையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல்நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமலையப்பபுரம் பகுதியை சேர்ந்த அருள்ராஜுக்கும், காவல்நிலைய எழுத்தர் பாலசுப்பிரமணியனுக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
இதனால் இருவரும் மாறி மாறி காவல்நிலையத்தில் புகாரளித்து வந்தனர், இந்நிலையில் கடையம் போலீசார் விசாரணைக்காக அருள்ராஜை காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
அப்போது அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.