திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டியில் ஸ்ரீஅங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் ஆடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலில் ஆடி மாத திருவிழா கடந்த வாரம் சாமி சாட்டுதலுடன் துவங்கியது.
திருவிழாவின் முதல் நாளில் அம்மனின் பெட்டியை ஜோடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், பெட்டியை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இந்நிலையில், இளைஞர்கள் கையில் தீச்சட்டி ஏந்தியும், காலில் சலங்கை கட்டியும் நடனமாடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.