பீகாரில் போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
பீகாரில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், வினாத்தாள் கசிவுக்குக் காரணமான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், பீகார் பொதுத் தேர்வுகள் மசோதா அம்மாநில சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
அந்த வகையில், தேர்வில் முறைகேடு செய்யும் மாணவர்களுக்கு மூன்று முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒருவேளை அரசு அல்லது தனியார் நிறுவன ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதமும், நான்கு ஆண்டுகள் பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெற்ற செலவின் ஒரு பகுதி அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என வும் பீகார் சட்டத்துறை அமைச்சர் விஜய்குமார் செளத்ரி தெரிவித்துள்ளார்.