மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில், தெலுங்கு பட இயக்குநர் ரவி ராஜா பினி செட்டி, அவரது மனைவி ராதாராணி பினி செட்டியின் 76 -ஆவது வயது பூர்த்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், அவரது மூத்த மகனும், இயக்குநருமான சத்திய பிரபாஸ், 2-வது மகனும், நடிகருமான ஆதி, அவரது மனைவியும் நடிகையுமான நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.