விவசாயிகளின் போராட்டத்தையொட்டி, டெல்லி ஷம்பு எல்லையில் அமைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றுமாறு ஹரியானா, பஞ்சாப் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி முதல் டெல்லி ஷம்பு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையொட்டி, அங்கு ஹரியானா, பஞ்சாப் மாநில அரசு சார்பில் வைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றுமாறு பஞ்சாப் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண சுதந்திரமான குழுவை ஒருவாரத்தில் அமைக்குமாறு இருமாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.