திமுகவின் வேஷம் நிச்சயம் 2026 தேர்தலில் கலையும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வடசென்னை மாவட்ட பாஜக சார்பில் திருவொற்றியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், மத்திய பட்ஜெட்டை கண்டித்து 40 எம்.பி.க்களும் போராட்டம் நடத்த மட்டும் தான் முடியும் எனவும், தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றிருந்தால் உரிமையோடு பல திட்டங்களை கேட்டு பெற்றுத் தந்திருக்க முடியும் எனவும் தெரிவித்தார்.