புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2021-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் 2 கோடியே 10 லட்சமாக இருந்தது. அதன்பின் 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10 லட்சம் அதிகரித்து 2 கோடியே 20 லட்சம் ஆனது.
தற்போது தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் உள்ளன. தற்போது சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர்.