பண மோசடி வழக்கில் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்படாத சீகேட் ஹார்ட் டிஸ்க் அமலாக்கத் துறைக்கு எப்படி கிடைத்தது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பின்னர் நாளை உரிய பதிலுடன் வர வேண்டும் என அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.