மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2020-ஆம் ஆண்டு முதன்மை செயலாளர் தங்களை தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்தியதாக தயாநிதி மாறன் பேசியிருந்தார்.
இதையடுத்து தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தயாநிதி மாறன் மீது கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் தயாநிதி மாறன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என கூறப்படுகிறது.