தெலங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் ATM இயந்திரத்தில் வித்தியாசமான முறையில் கொள்ளையடித்த சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதன்படி ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் வெளியே வரும் இடத்தில் பிளாஸ்டிக் ஸ்ட்ரிப்களை பெவிகால் கொண்டு ஒட்டியுள்ளனர்.
இதனால் ஏ.டி.எம்.ல் பணம் வெளியே வராமல் இடையில் சிக்கி கொள்ளும். வாடிக்கையாளர்கள் பணம் இல்லை என நினைத்து வெளியே சென்றதும் உள்ளே வரும் சிறுவர்கள் பிளாஸ்டிக் ஸ்ட்ரிப்பை வெளியே எடுத்து பணத்தை திருடியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.