‘கே.ஜி.எஃப்.’, ‘சலார்’ திரைப்படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்ததாக அஜித்துடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் நீல் அஜித்துடன் இரு திரைப்படங்களில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் பிரசாந்த் நீலின் யூனிவர்சிற்குள் வரும் எனவும், கே.ஜி.எஃப் 3-ல் யஷூடன் அஜித் இணைவதாகவும், அப்படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரத்தில் அஜித் நடிப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
கடந்த மாதம், அஜித்தும், இயக்குனர் பிரசாந்த் நீலும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பின் போது சந்தித்து பேசியது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.