மத்திய பாதுகாப்பு படைகளில் அக்னிவீர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடும், வயதுவரம்பில் தளர்வும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகாலம் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுகின்றனர்.
இந்நிலையில், அவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மற்றும் வயதுவரம்பு, உடல் தகுதித் தேர்வில் தளர்வு அளித்து, கான்ஸ்டபிள் போன்ற பணியில் அமர்த்த சிஐஎஸ்எஃப், சிஆர்பிஎஃப், சசாஸ்திர சீமா பால், ஆர்பிஎஃப் உள்ளிட்ட அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.