மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.சச்சிதானந்தம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்! - ஆர்.எஸ்.எஸ். 
Sep 19, 2025, 03:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.சச்சிதானந்தம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்! – ஆர்.எஸ்.எஸ். 

Web Desk by Web Desk
Jul 24, 2024, 07:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ். மீதான அவதூறு கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.சச்சிதானந்தம் திரும்பப் பெற வேண்டும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.  தென் பாரத ஊடகத்துறை செயலாளர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஹிந்து ஒற்றுமை மூலம் நாட்டு மக்களிடையே தேசபக்தியையும், தெய்வபக்தியையும் தட்டியெழுப்பி தேசிய புனர் அமைப்புப் பணியில் கடந்த 99 ஆண்டுகளாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) ஈடுபட்டு வருகிறது உலகின் மிகப்பெரிய தொண்டு அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சார்பில் பாரத நாடு முழுவதும் 1.5 லட்சம் சேவைப் பணிகள் நடைபெறுகின்றன.

இளைஞர்களிடம் தேசபக்தி உணர்வு வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸில் அரசு ஊழியர்கள் சேரக் கூடாது என்று அன்றைய ஆங்கிலேய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அந்த உத்தரவு நீக்கப்பட்டது.

கருத்துரிமையையும் விரும்பும் அமைப்பில் செயல்படும் சுதந்திரத்தையும் நமது அரசியல் சாசனம் வழங்கியது. ஆனால், 1966ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ஆர்.எஸ்.எஸ்.ஸில் மத்திய அரசு ஊழியர்கள் சேரக் கூடாது என்று உத்தரவிட்டார். ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அந்த உத்தரவை, 58 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதைய மத்திய அரசு சமீபத்தில் திரும்ப பெற்றுக் கொண்டது. இது கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

இன்றைய காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அரசியல், ஆன்மீகம், கலாச்சாரம், தொழிற்சங்கம், சேவை, விவசாயம் என பல்வேறு துறைகளில் பல சாதனைகளைப் புரிந்து வருவது கண்கூடு ஆர்.எஸ்.எஸ்.பயிற்சி பெற்ற தொண்டர்கள் நேர்மையுடனும் தீரத்துடனும் தொடர்ந்து மக்கள் பணியில ஈடுபடுவதை பலரும் கண்டு வியந்துள்ளனர்.

ஆனால், ஜனநாயக நெறிமுறைகளை நசுக்கிய உத்தரவை இப்போதைய அரசு நீக்கியதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக எம்.பி.க்கள் இருவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதில் திண்டுக்கல் தொகுதி எம்.பி. சச்சிதானந்தம், மகாத்மா காந்தியை கொலை செய்த இயக்கம் என்று ஆர்.எஸ்.எஸ். மீது அவதூறு பரப்பியுள்ளார்.

கடந்த 1948 இல் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது ஆர்.எஸ்.எஸ். மீது
அபாண்டமான பழி சுமத்தி தடை செய்யப்பட்டது. ஆனால், பிறகு
ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் காந்தி கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்கியது வரலாறு மேலும் காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பல்வேறு விசாரணை கமிஷன்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

மேலும் 1934 ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலம், வார்தாவில் நடந்த ஆர்.எஸ்.எஸ்.முகாமுக்கு மகாத்மா காந்திஜி வருகை தந்தது வரலாறு. நாடு முழுவதும் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களில் தினசரி அதிகாலையில் பாடும் பிரார்த்தனையில் மகாத்மா காந்தி நினைவூட்டப்படுகிறார்.

ஆனால் சங்கத்தின் எதிரிகள் வழக்கம் போல காந்தி கொலையோடு முடிச்சுப் போடுவதும் பிறகு நாங்கள் வழக்கு தொடுத்தால் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோருவதும் தொடர்ந்து நிகழ்கிறது.

ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்கள் சீதாராம் கேசரி, அர்ஜுன் சிங், திக் விஜய் சிங் போன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸை காந்திஜி கொலையோடு சம்பந்தப்படுத்தி பேசி நீதிமன்றங்களில் அவதூறு வழக்கை எதிர்கொண்டனர். சமீபத்தில் கூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க நேர்ந்தது.

எனவே ஆர்.எஸ்.எஸ். மீதான அவதூறு கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.சச்சிதானந்தம் திரும்பப் பெற வேண்டும், மேலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி அவர் வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Marxist Communist Party MP Sachithanandam should apologize unconditionally! - RSS
ShareTweetSendShare
Previous Post

மத்திய படையில் அக்னி வீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு!

Next Post

வலைதளங்களில் வைரல் 27 மாவட்டங்களை புறக்கணித்த ஸ்டாலின்?

Related News

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies