ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஜோக்கர்-2 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தின் பாகம்-1 இயக்குநர் டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இப்படத்தின் கதாநாயகன் ஜாக்குவன் பீனிக்ஸ்க்கு உயரிய விருதுகளான ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.
இந்நிலையில் ஜோக்கர் பாகம் -2 டிரெய்லரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.