பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட தொலைதூர தனியார் பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட தொலைதூர தனியார் பேருந்துகளை தமிழகத்திற்குள் இயக்க தனியாக வரி செலுத்த வேண்டும் என்ற அரசின் உத்தரவை எதிர்த்து ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், இந்தியா முழுவதும் பேருந்துகளை இயக்க அனுமதி சீட்டுகளை பெற்றுள்ள நிலையிலும் தமிழகத்துக்குள் இயக்க அரசு தனி வரி செலுத்த வேண்டும் எனக்கூறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சுற்றுலா செல்ல இயக்கப்படும் பேருந்துகளுக்கு மட்டுமே அகில இந்திய அனுமதி சீட்டு பொருந்தும் என தெரிவித்தனர்
மேலும், இதுகுறித்து வரும் 29ம் தேதி தமிழக போக்குவரத்துத் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் அதுவரை பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட தொலைதூர தனியார் பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.