18 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் நிகழ்ந்த சனி சந்திர கிரகணத்தை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெறும் கண்களாளேயே காண முடிந்தது.
டெல்லியில் உள்ள நேரு கோளரங்கம், மேற்கு வங்கத்தின் சிலிகுரி, குஜராத்தின் ராஜ்கோட் மற்றும் மும்பையின் செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கிரகணம் தெரிந்தது.
சந்திரன் சனி கிரத்தின் முன் நேரடியாக கடந்து செல்லும்போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது.
இந்த நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க முடிந்தாலும், சனி கிரகத்தின் வளையங்கள் தொலைநோக்கியில் பார்த்தால் மட்டுமே தெரியுமென வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.