மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதி சுற்றில் இந்தியா – வங்காளதேச அணிகள் மோதுகின்றன.
9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இதில் சிறப்பான ஆட்டங்களை வெளிபடுத்து இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் வங்காளதேச அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.