இலங்கையில் செப்டம்பர் 21ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
இலங்கையில் கடந்த 2022ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மிகப்பெரிய புரட்சி வெடித்தது.
இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார்.
இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கேயின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளதையடுத்து அதிபர் தேர்தல் நடைபெறும் தேதியை இலங்கை தேர்தல ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் வரும் செப்டம்பர் 21ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதாகவும், ஆகஸ்ட் 15 முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் தற்போது அதிபர் ம் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
இதனிடையே அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.