தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள கொண்டை ஊசிசாலை சேதமடைந்துள்ளதால் அதனை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பத்திலிருந்து கம்பம் மெட்டு செல்லும் கொண்டை ஊசி வளைவு சாலை பேவர் பிளாக் கற்காளால் அமைக்கப்பட்டது.
தற்போது இந்த சாலை மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக சேதம் அடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.