குளித்தலை அருகே அய்யர்மலையில் திடீரென ரோப் கார் பழுதடைந்து நின்றதால், பாதி வழியிலேயே பக்தர்கள் அந்தரத்தில் சிக்கித் தவித்தனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யர்மலைக்கான ரோக் கார் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் இயந்திர கோளாறு காரணமாக ரோப் கார் இருபுறங்களிலும் செல்ல முடியாமல் நடுவழியில் நின்றதால் பக்தர்கள் கூச்சலிட்டனர். இதனையடுத்து ரோப் காரில் சிக்கியிருந்த 3 பெண்களை ரோப் கார் ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.