இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கார்கில் போர் 25வது நினைவு தினத்தையொட்டி கார்கில் போர் நினைவிடத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
அந்த வகையில் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களை போற்றும் விதமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் முபபடைத்தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் உள்ள ஸ்மிரித்திகா போர் நினைவிடத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா, ஜெய்ப்பூரில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.