திருப்பூரில் பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றி உயிர்நீத்த வாகன ஓட்டுநரின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூரில் தனியார் பள்ளியில் வாகன ஓட்டுநராக சேமலையப்பன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில்,சேமலையப்பன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.