தென்காசி மாவட்டம் குற்றால அருவி அருகே மது போதையில் ஆட்டம் போட்ட இளைஞர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
குற்றால அருவியில் தற்போது சீசன் காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் நள்ளிரவில் மது போதையில் அருவிக்கு சென்ற இளைஞர்கள் அதிக ஒலியுடன் பாட்டுக்கு ஆட்டம் போட்டனர்.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இளைஞர்களை எச்சரித்து அனுப்பினர்.