திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ஏடிஎம் எந்திரத்தில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூனாண்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர்கள், ட்ரிலிங் மிஷினைக் கொண்டு எந்திரத்தை உடைக்க முயன்றனர்.
ஆனால் முயற்சி தோல்வியடைந்ததால் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து வங்கி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.