கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூர் அணை 3வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.
நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.