இந்து மக்கள் மற்றும் இந்து கோவில்களுக்கு எதிராக சென்னை மெட்ரோ நிறுவனம் செயல்பட்டு வருவதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆயிரம் விளக்கு முதல் நுங்கம்பாக்கம் வரையிலான மெட்ரோ கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் ராயப்பேட்டை ஒயிட்ஸ் ரோடு பகுதியில் துர்க்கை அம்மன் கோயில் மற்றும் அதற்கு அருகிலேயே 250 ஆண்டு கால பழமை வாய்ந்த விநாயகர் கோயிலும் அமைந்திருக்கிறது.
மெட்ரோ கட்டுமானத்திற்காக இந்த விநாயகர் கோவில் மற்றும் துர்க்கை அம்மன் கோவிலின் கோபுரத்தை இடிப்பதாகவும் மெட்ரோ வேலைப்பாடுகள் நிறைவடைந்த பிறகு துர்க்கை அம்மன் கோவில் கோபுரத்தை கட்டி தருவதாகவும் மெட்ரோ நிறுவனம் கூறி இருக்கிறது. இதனை கண்டித்து ஆலைய காப்பக அமைப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா இங்கு வந்து ஆய்வினை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய தமிழக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா,
ஏன் ஹிந்து கோவில்கள் மட்டும் டார்கெட் செய்யப்படுகிறது என நீதிபதி கேட்டிருக்கிறார்.. கோவில் இருக்கும் இடத்தில் திட்டமிடபட்டிருக்கும் நிலையம் ஏன் அருகில் இருக்கக்கூடிய காலி இடத்திற்கு மாற்றப்படவில்லை ?
சிஎம்ஆர்எல் நிறுவனத்தின் எம் டி சித்திக் மற்றும் லிவிங்ஸ்டண் ஆகியோர் இந்த கோவிலை அகற்றி இங்கு நிலையம் அமைக்க வேண்டும் என துடிக்கின்றனர். கோவில் மட்டுமே டார்கெட் செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி கூறியதை நிரூபிக்கும் வகையில் இவர்களது செயல்பாடு இருக்கிறது.
இன்று இரவுக்குள் கோவில் அருகில் வைக்கப்பட்டு இருக்கும் இயந்திரங்கள் அகற்றப்பட வேண்டும் இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்
இந்த இரு கோவில்களும் 1895 முதல் வருகிறது. இது ஒரு Heritage structure. நூறாண்டுகளுக்கு மேல் அது சொந்த வீடாகவே இருந்தாலும் அதனை இடிக்க முடியாது. ஆனால் சித்திக் மற்றும் லிபிங் ஸ்டண்ட் இந்த கோவில்களை இடிக்க சதியை திட்டுகிறார்கள். விருகம்பாக்கத்தில் சுந்தர வரதராஜன் கோவிலையும் இடிக்க போராடினார்கள். ஆனால் அவர்களது திட்டம் பலிக்கவில்லை.
இப்போது துர்க்கை அம்மன் கோவிலுக்கு ஒரு அடியில் வெற்றிடம் இருக்கிறது. யாருக்கும் தொந்தரவற்ற இடம் இருக்கிறது. அங்கு இந்த மெட்ரோ நிலையத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஆனால் வேண்டுமென்று சித்திக் மற்றும் அந்த லிவ்விங்ஸ்டன் கோவிலை அப்புறப்படுத்த வேண்டும் என முயல்கிறார்கள்.. சிஎம்ஆர்எல் 6 முதல் 7 கோவில்களை டார்கெட் செய்து இடித்திருக்கிறார்கள்.
கோவிலை இடிப்பது தங்களது கடமைகளாக சித்திக் மற்றும் லிவிங்ஸ்டன் வைத்திருக்கிறார்கள் 200 வருடங்களாக இருக்கக்கூடிய இந்த கோவிலை எடுக்க முயல்கிறார்கள்.
இந்து கோவில்கள் டார்கெட் செய்யப்படுவதாக நீதியரசர் கூறியிருக்கிறார். இதற்கு சித்திக் மற்றும் லிவிங்ஸ்டன் பதிலளிக்க வேண்டும்.. கோவில் இருக்கும் இடத்தை தவிர்த்து அருகில் இருக்கும் இடத்தில் நிலையத்தை மாற்றினால் உங்களுக்கு என்ன கேடு
டெஸ்டிங் செய்வதற்காக மணல் எடுப்பதாக இந்த இயந்திரங்களை வைத்திருப்பதாக பணியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இயந்திரங்கள் கோவிலுக்கு உள்ளேயே வைக்கப்பட்டு இருக்கிறது.
நேற்று இரவு திருட்டுத்தனமாக சித்திக் மற்றும் லிவ்விங்ஸ்டண் அவர்களின் ஆட்கள் கோவில் அருகில் வேலை பார்த்து இருக்கிறார்கள் அண்ணா சாலை காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
திருட்டுத்தனமாக எது நடந்தாலும் பிடிக்க வேண்டும் என்பதுதான் காவல்துறையினரின் பிரதான வேலை. அந்த வகையில் கோவில் அருகில் திருட்டுத்தனமாக வேலை செய்தால் அவர்களை பிடிக்க வேண்டும். சென்னை மெட்ரோ பணிகளுக்காக மசூதி தேவாலயம் என எந்த இடங்களையும் மெட்ரோ எடுத்ததில்லை.
இந்த துர்க்கையம்மன் கோவிலின் 75% இடம் மெட்ரோ வேலைப்பாடுகளுக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இவர்கள் Anti Hindu activity ஈடுபட்டு வருகின்றனர் . 75% இடத்தை எடுத்து நன்றி கெட்டவர்களாக இருக்கிறார்கள்.
சித்திக் மற்றும் லிவிங்ஸ்டன் சர்ச், மசூதி மற்றும் கோவில் இடங்களை எடுத்தது தொடர்பான வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். நேர்மையாக பகலில் வேலை செய்ய முடியாது என்பதற்காக இரவில் CMRL வேலைகளை செய்து வருகிறார்கள்..
CMRL இந்து மக்கள் மற்றும் இந்து கோவில்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. பட் சாலையில் மசூதியை காப்பாற்றுவதற்காக மெட்ரோ நிலையத்தை மாற்றி ஏழு அடுக்கு கட்டிடத்தை இடித்து இருக்கின்றனர். ஆனால் இந்த கோவிலை மட்டும் இவர்கள் டார்கெட் செய்கிறார்கள் எனத் தெரிவித்தார்.