மசோதாக்களை தாமதப்படுத்துவதாக மாநில அரசுகள் தொடர்ந்த வழக்கில், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எவ்வித தகவலும் இன்றி, 8 மசோதாக்களை ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் வைத்திருப்பதாகக் கூறி, கேரளா மற்றும் மேற்கு வங்க அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக, ஆளுநரின் செயலரும், மத்திய அரசும் 3 வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.