ஜூன் 25-ம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினமாக மத்திய அரசு அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி, அரசியலமைப்பு படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இந்த அறிவிப்பு அரசியலமைப்பை மீறும் விதமாகவோ, அதனை அவமதிக்கும் விதமாகவோ இல்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.