ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே, சரக்கு ரயில் ஒன்றின் இரு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்து நிகழ்ந்த இடத்தில் ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தினால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.