கார்கில் போரின்போது வீர மரணமடைந்த வீரர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கார்கில் போரின் போது துணிச்சலுடன் போரிட்டு, தேசத்தைக் காப்பதற்காக தங்களின் உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு வணக்கம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் பெயர்கள், தேசத்தின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.