திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முத்தனபள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை வழங்காமல் தரமற்ற உணவு வழங்குவதாக புகார் எழுந்தது. ஆகவே பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.