மயிலாடுதுறையில் பள்ளி ஆசிரியர்கள் கண்டித்ததால் 8ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தர்காடு பகுதியை சேர்ந்த ராமசந்திரன் – ராஜலட்சுமி தம்பதியினரின் மகள் ரோஷினி, மேலையூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் பள்ளியில் நடந்த மாதிரித் தேர்வில் ரோஷினி முறைகேட்டில் ஈடுபட்டதால், ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவியின் தாய் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.