கார்கில் தினத்தை ஒட்டி திருச்சியில் உள்ள மேஜர் சரவணனின் நினைவிடத்தில் ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
25வது ஆண்டு வெற்றிதினவிழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் வீரமரணமடைந்த மேஜர் சரவணன் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் நிர்வாக கமாண்டர் கர்னல் ஷ்யாம் சாரதி, மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம், வட்டாட்சியர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.