திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அரசுப் பேருந்தின் ஜாயிண்ட் ராடு உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வத்தலகுண்டில் இருந்து கொடைரோட்டுக்கு அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. நிலக்கோட்டை அருகே சென்றபோது பேருந்தில் இருந்த நீள் வடிவிலான பாகம் உடைந்து கீழே விழுந்தது.
இதனால் பேருந்து நிலை தடுமாறியதால் பயணிகள் அச்சத்தில் அலறினர். அப்போது பேருந்து ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார். நிலக்கோட்டையில் பல அரசுப் பேருந்துகள் பழுதடைந்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.