தேசத்தை வீரம்கொண்டு காத்த இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலையும், தியாகத்தையும் பெருமையுடன் நினைவுகூர்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கார்கில் போர் 25ம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பாரத தேசத்தின் ஒரு பிடி மண்ணையும் மற்றொருவர் ஆள்வதை அனுமதிக்க மாட்டோம் என்பதற்கு சான்றாக கார்கில் போரில் வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தேசத்திற்காக தங்களை அர்ப்பணித்த வீரர்களை ‘விஜய் திவாஸ்’ எனும் இந்த தினத்தில் நினைவுகூர்வதாகவும் எல்.முருகன் கூறியுள்ளார்.