கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் கிடந்த குப்பைகளை தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து அப்புறப்படுத்தினர்.
கர்நாடகா மாநிலத்தில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
மேலும், அடுத்த மாதம் ஆடிப்பெருக்கு விழா நடைபெற உள்ளதால், காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்ல ஏதுவாக ஏழு டன் குப்பைகள் அகற்றப்பட்டது.