ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளத. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 97 ஆயிரம் கன அடியில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 12-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.