ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தின் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் திருச்சியில் BSNL சிம் கார்டு விற்பனை ஒரே மாதத்தில் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
சேவை கட்டண உயர்வு காரணமாக ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் BSNL சேவைக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் புதிய BSNL சிம் கார்டுகளை பெற பொதுமக்கள் வாடிக்கையாளர் சேவை மையங்களில் குவிந்து வருகின்றனர்.