சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான பார்வையற்றோருக்கான கைப்பந்து போட்டி தொடங்கியது.
இதில் 130 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்னர். பெண்கள் பிரிவில் ஐந்து அணிகளும், ஆண்கள் பிரிவில் 13 அணிகளும் கலந்து கொண்டுள்ள நிலையில் வெற்றிபெறும் அணிகள் தென் மாநில அளவில் நடைபெறும் கைப்பந்து போட்டியில் விளையாட தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.