வீட்டிற்குள் பணம் எதுவும் கிடைக்காத விரக்தியில், ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை என கேமரா முன்பு கொள்ளையன் ஒருவன் சைகை செய்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் மகேஷ்வரம் நகரில் முகமூடியுடன் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன், எங்கும் தேடியும் பணம் கிடைக்காததால் விரக்தி அடைந்துள்ளான்.
பின்பு அங்கிருந்த சிசிடிவி கேமரா முன்பு ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை என்றும், டேபிளில் 20 ரூபாய் வைத்துவிட்டு செல்கிறேன் எனவும் சைகை செய்து கொள்ளையன் ஏமாற்றத்துடன் சென்றுள்ளான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.