டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
நத்தம் தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் – மதுரை பந்தர்ஸ் அணியும் மோதின, முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 5 விக்கெட்டுக்கு 201 ரன்களை குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மதுரை அணி 8 விக்கெட்டுக்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனையடுத்து அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.