பாரீஸ்ஸில் ரயில் பாதைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என அந்நாட்டு உளவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பாரீஸில் ஒலிம்பிக் திருவிழா கொண்டாடப்படும் நிலையில் கிளர்ச்சியாளர்கள் முக்கிய ரயில் பாதையை துண்டித்தும் மின்கம்பிகளை தீவைத்து எரித்தனர்.
இதனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு பாதைகள் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.