பாரீஸ் ஒலிம்பிக்கின் ஹாக்கி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.
இன்று தொடங்கும் ஹாக்கிப் போட்டிகள் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 12 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இன்று இரவு 9 மணிக்கு தொடங்கும் ஹாக்கிப்போட்டியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி பி- பிரிவில் இடம் பெற்றுள்ளது.
















